ஒகேனக்கல்;
கர்நாடக மாநிலத்தில் கபினி அணை முழுகொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி காவிரியில் விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணைக்கு, 4 ஆயிரத்து 361 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் அணையின் மொத்த உயரமான 84 அடியில், நீர் மட்டம் 83 அடிக்கும் அதிகமாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு, முழுக் கொள்ளளவை எட்டியது ஆகிய காரணங்களால் அணையின் பாதுகாப்பு கருதி, கபினியில் இருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்படுகிறது.

விநாடிக்கு 4 ஆயிரத்து 700 கனஅடியில் இருந்து நீர்திறப்பு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஓரிரு நாட்களில் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.