திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சிக்கு எதிரிகள், காங்கிரஸில்தான் இருக்கிறார்கள் என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே. அந்தோணி, திடீர் ஞானோதயம் வந்தவர் போல பேசியுள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் கருணாகரனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நடைப்பெற்ற விழாவில் ஏ.கே. அந்தோணி பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

யதுகுலத்தவர்கள் தங்களுக்குள் மாறி மாறி அடித்துக்கொண்டதைபோல காங்கிரஸ்காரர்கள் தற்போது சண்டையிட்டுக் கொள்கிறார்கள். தலைவர்களின் கோஷ்டி மோதலால் காங்கிஸ் அழிந்துபோகும். இன்று தலைவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டு கட்சியை மக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிரிகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேதான் இருக்கிறார்கள். நம் கட்சி உள் விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் செய்யக்கூடாது. கட்சி மேடையில் அதுபற்றி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். தலைவர்களுக்கு சுயகட்டுப்பாடு வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் தலைவர்களுக்கு லட்சுமண கோடு போட வேண்டும்.இவ்வாறு அந்தோணி ஆலோசனைகளை அள்ளி விட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.