சென்னை;
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக வெள்ளியன்று சென்னையில் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி தொடர்ந்து மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

மாநில செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் வரும் 9ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். வரும் 12ஆம் தேதி அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளோம்.

அரசு உடனடியாக எங்கள் கோரிக்கைகள் மீது சுமூக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் எங்களது போராட்டம் தீவிரமடையும்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ், மாநிலப் பொருளாளர் மா.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.