போபால் :

மதுபான விற்பனைக்கு பீகார் கடந்த 2016ல் தடை விதித்ததை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் அதை பரிசீலித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக கடந்த 2017ல் மத்திய பிரதேச அரசு மது விற்பனையை முற்றிலுமாக தடை செய்வதாக அறிவித்தது.

ஆனால், மதுபான விற்பனைக்கு தடைவிதித்து ஓர் ஆண்டு ஆன நிலையில் தற்போது அதை திரும்ப பெறுவதாக பாஜக தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மதுபான தடையால் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் ஜெயன்ந்த் சின்கா காரணம் கூறியுள்ளார்.

மாநில அரசுகள் புதிய உத்திகளை கையாண்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தங்களின் பங்குகளை மேம்படுத்தி நிதி வருவாயை திரட்ட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: