ஸ்ரீநகர்;
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனி உதவியாளராக இருந்து வந்தவர் காவலர் ஜாவேத் அகமத் தர். இவர் வியாழனன்று மாலை தனது வீட்டில் இருந்து ஒரு மருந்தகத்துக்குச் சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில், சமூக வலைதளமொன்றில் வெளியான புகைப்படத்தை வைத்து, வெள்ளியன்று காலை, டங்கன் என்ற பகுதியில் ஜாவேத் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலின் பல பகுதிகளில் குண்டுகள் பாய்ந்திருந்தன. இந்நிலையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: