புதுதில்லி;
பிரிவினைவாதம் மற்றும் அப்சல் குருவிற்கு ஆதரவாக பேசி, பிரச்சனையை உருவாக்கியதாக கூறி, தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் தலைவர்கள் கன்னையா குமார், உமர் காலித் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தூக்கு தண்டனை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2016-ம் ஆண்டு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மாணவர்கள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர்கள் என்ற வகையில், கன்னையா குமார், அவரின் நண்பர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆனால், அப்சல் குரு உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள் என்று, ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி கிளப்பி விட்டது. மத்திய பாஜக அரசும், ஜேஎன்யு மாணவர்கள் மீது, தேசத் துரோக வழக்கு பதிவு செய்தது. இந்த அடக்குமுறையை ராகுல் காந்தி, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கண்டித்த நிலையில், அவர்கள் மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது.இந்நிலையில், நிர்வாக நடவடிக்கை என்ற அடிப்படையில், உமர் காலித், கன்னையா உள்ளிட்ட 13 மாணவர்களுக்கு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் ஒழுக்கத்திற்கு கேடு விளைவிக்கும்படி நடந்து கொண்டதால் அவர்களுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: