17 வது உலகத் தமிழ் இணைய மாநாடு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று துவங்கியது . இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன், முனைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் உட்பட   பல்வேறு நாடுகளை சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
உத்தமம் என்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் 1997 ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்திவருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகத்தில் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று துவங்கியது . வருகிற 8 ஆம் தேதி வரை மாநாடு நடைபெறுகிறது .
மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய உத்தமம் நிறுவனத்தின் தலைவர்  பிரான்ஸ் பேராசிரியர் எ.முருகையன், தமிழர் வாழும் நாடுகளில் உள்ள, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை ஒன்றிணைத்து செயல்பட போவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தற்போது  கல்வி விலை போகிறதனதை தடுக்க வேண்டும், தற்போதைய பள்ளி பாட திட்டம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.  தொழில் கல்வியில் தமிழை அதிகமா பயன்படுத்தவேண்டும், தொழில் கல்வியில் தமிழ் மொழியை பயன்படுத்தும் பல்கலைக்கழகமாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் செயல்படுகிறதென்று கூறினார்
“அறிவுசார் தமிழ்த் தேடுபொறிகள்” என்ற தலைப்பில்  நடைபெறும் இந்த மாநாடு , மக்கள் அரங்கம், கண்காட்சி அரங்கம் , பயிற்சி பட்டறை என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது .  இதில் ஆய்வரங்கத்தில் இயல்மொழிப் பகுப்பாய்வு, இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் வகுப்பறைகள் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் கருத்தரங்கில் ஆராய்ச்சியாளர்கள் வழங்க உள்ளனர்.  சுவிட்சர்லாந்து, ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலிய, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, போன்ற நாடுகளில் இருந்து 160 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உள்ளனர் .
மக்கள் அரங்கத்தில் பொதுமக்களுக்கும், மாணவருக்கும் அலைபேசிகளுக்கான தொழில்நுட்பம் , ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் , முப்பரிமாண  அச்சு, குறுஞ்செயலி உருவாக்கப் பயிற்சி , கணினி சார்ந்த பயிற்சிகள், இணையம் சார் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்பட உள்ளது . மேலும் கண்காட்சி அரங்கில் மழலையர் பள்ளியிலிருந்து, பல்கலைக்கழகம் வரை எல்லோரும் பயன்பெறும் வகையில் பலகைக் கணினி முதல் அனைத்துக் கருவிகளும் தமிழ்க் கருப்பொருளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது . உலகளவில் இருந்து 9 முக்கிய  தமிழ் அறிஞர்கள்  இம்மாநாட்டில் கலந்துகொண்டு உள்ளனர். வரும் 8 தேதி வரை இந்த மாநாடு நடக்கிறது .

Leave A Reply