சுவீடன் – இங்கிலாந்து
நேரம் : 7:30 மணிக்கு
இடம் : சமரா அரீனா

சுவீடன்:
மொத்த கோல் : 6
பலம் : ரஷ்ய மண்ணில் நடுகளம்,தடுப்பாட்ட பிரிவுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுவீடன் அணி,ஆட்டத்தின் பெரும்பாலான நிமிடங்களில் பந்தை தனது கட்டுப்பாட்டில் சுழல வைப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். பலவீனம் : முன்கள வீரர்கள் சீரான வேகத்தில் கூட ஓட முடியாமல் திணறுவது,ஷாட் அடிக்காமல் பந்தை கோல் கம்பம் வரைகொண்டு செல்ல முயற்சிப்பது.
நட்சத்திர வீரர் : ஆண்ட்ரஸ் கிரான்குவிஸ்ட் (2 கோல்கள்)

இங்கிலாந்து:
மொத்த கோல் : 9
பலம் : நடுகளம்,தடுப்பாட்டம்,முன்களம் என மூன்று பிரிவுகளிலும் இங்கிலாந்து அணி பலமாக உள்ளது.இங்கிலாந்து அணி வீரர்கள் ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை எவ்வித பதற்றமும் இல்லாமல் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். பலவீனம்: நடுகளத்தில் பந்தை கடத்துவது,கார்னர் கிக் வாய்ப்புகளை சிறிய அளவில் கூட முயற்சி செய்யாமல் வீணடிப்பது,ஒட்டுமொத்த மொத்த அணியும் கேப்டன் ஹாரி கேனை நம்பியிருப்பது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

நட்சத்திர வீரர் : ஹாரி கேன் (6 கோல்கள்)

இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால், இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பான கட்டத்தில் நகரும் என எதிர்பார்க்கபடுகிறது.

 

ரஷ்யா – குரோசியா
நேரம் : 11:30 மணிக்கு
இடம் : சோச்சி

ரஷ்யா
மொத்த கோல் : 9
பலம் : முன்களம்,தடுப்பாட்டத்தில் சிறப்பாக செய்லபடும் ரஷ்ய அணி உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களமிறங்குவது,அந்த அணிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது.பலவீனம்: நடுகளத்தில் பந்தை எளிதில் கடத்த முடியாமல் எதிரணியிடம் பந்தை விட்டு கொடுப்பதும்,கோல்கம்பத்தை கணிக்காமல் ஷாட் அடிப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
நட்சத்திர வீரர் : செரிஷேவ் (3 கோல்கள்)

குரோசியா
மொத்த கோல் : 8
பலம் : பலமான அணியாக இருந்தாலும் சரி,கத்துக்குட்டியாக இருந்தாலும் சரி தாக்குதல் பாணி ஆட்டத்தை தொடுப்பதுதான் குரோசியா அணிக்கு முக்கிய பலமாகும்.தடுப்பாட்டத்தில் சுவர் எழுப்பியது போல் கம்பிரமாக பந்தை தடுப்பது. பலவீனம் : கார்னர் வரை பந்தை சிறப்பாக கொண்டு சென்றாலும் தேவையில்லாத ஷாட்களால் கோல் வாய்ப்புகளை வீணடிக்கின்றனர்.அந்த அணியின் முன்கள வீரர்கள்.
நட்சத்திர வீரர் : மோட்ரிக் (2 கோல்கள்)

இரு அணிகளை ஒப்பிடும் பொழுது குரோசியா அணி சற்று பலமாக உள்ளது. இருப்பினும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ரஷ்ய அணி,அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்குவதால் யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

You must be logged in to post a comment.