புதுதில்லி :

பொதுவாக இரயில் பயணத்தின்போது ஆதாரத்திற்கு காட்டுவதற்காக நம்முடைய ஒரிஜினல் அடையாள அட்டைகளை கையில் எடுத்து செல்வதை பாதுகாப்பு குறைவாக கருதுகிறோம். தற்போது அவ்வாறு அடையாள அட்டைகளை எடுத்துச் செல்வதற்கு பதிலாக மின்னணு அடையாள அட்டைகளை ஆதாரமாக காண்பிக்கலாம் என இந்தியன் இரயில்வே அறிவித்துள்ளது.

எனினும் தற்போதைய மத்திய அரசு அறிமுகப்படுத்திய டிஜிலாக்கர்(Digilocker) என்பதில் சேமித்து வைத்துள்ள மின்னணு அட்டைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. மேலும், மற்ற வகையிலான மின்னணு அடையாள அட்டைகளை ஆதாரமாக ஒத்துக்கொள்ளமுடியாது என்பதையும் கூறியுள்ளது.

டிஜிலாக்கர் என்ற செயலியில் நம்முடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான்கார்டு ஆகியவற்றை மின்னணு வகையிலான ஆதாரமாக சேமித்து வைக்க உதவும் ஒரு வலைதளமாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.