புதுதில்லி:
இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் பிரிட்டீஸ்காரர்கள் எனவும், அதனால்தான் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் பிரிட்டீஸ்காரர்களாக இருந்தனர். அதனால்தான் அவர்கள் விடுதலைப்போரில் பங்கேற்காமல் இந்தியாவை ஏமாற்றினார்கள். இந்துக்களோ முஸ்லீம்களோ அவ்வாறு ஏமாற்றவில்லை.இந்திய விடுதலைக்கு ஒன்றுபட்டு ஒற்றுமையாக – இந்துஸ்தானிகளாக நாம் போராடினோம், என மும்பை வடக்கு நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர் ஷெட்டி கூறினார். மும்பை ஷியா கபர்ஸ்தான் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழச்சி ஒன்றில், கலந்துகொண்டு இவ்வாறு பேசியதற்கு எதிர்ப்பும் விமர்சனமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ஷெட்டிக்கு வரலாறு தெரியாது எனவும் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இதை கூறியிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: