புதுச்சேரி, ஜூலை 5 –
புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வரும் துணை குடியரசு தலைவரிடம் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை வலியுறுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் தற்போது 66 பாடப்பிரிவுகள் இயங்கி வருகிறது.இவற்றில் புதுச்சேரி மாணவர்களுக்கு 18 பாடப்பிரிவுகளில் மட்டுமே 25இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. யுனியன் பிரதேசமான புதுச்சேரியில் அண்டை மாநிலங்களில் உள்ளது போல் மாநில பல்கலைக்கழகம் கிடையாது. பட்டப்படிப்பை பயிலும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியை தொடர வேண்டுமெனில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தை சார்ந்தே உள்ளனர். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மற்றும் காரைக்கால் என்ஐடியில் புதுச்சேரி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 27 விழுக்காடு இடங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதுச்சேரிபல்கலைக்கழக த்தில் அனைத்து பாடப்பிரிவுகளிலும் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் மட்டுமில்லாமல் பல்வேறு அரசியல்கட்சிகள், சமூக ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வெள்ளிக்கிழமை (ஜூலை-6) இன்று வருகைதரும் துணை குடியரசு தலைவர் வெங்கையநாயுடுவிடம் அனைத்து அரசியல் கட்சிதலைவர்களும் புதுச்சேரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2 5விழுக்காடு இடஒதுக்கீட்டை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்க வலியுறுத்தவேண்டும் என இந்தியமாணவர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக் குழு தலைவர் ஆனந்து, செயலாளர் பாபுஆகியோர் அறிக்கையின் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: