வேலூர்,
புதிதாக தொடங்கப்பட்ட 515 புதிய பேருந்துகளில் விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு 60 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் வேலூர் போக்குவரத்து மண்டலத்துக்கு 13 பேருந்துகள். இவற்றில் முதற்கட்டமாக 8 பேருந்துகள் வேலூரில் இருந்து சென்னைக்கு இடைநில்லாமல் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளில் நடத்துனர்கள் கிடையாது. அதேபோல் வேலூரில் இருந்து புறப்படும் பேருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தான் நிற்கும். இதன் மூலம் சென்னைக்குச் செல்ல பயண நேரம் வெகுவாக குறையும் வேலூரில் இருந்து சென்னைக்குச் செல்ல பேருந்து கட்டணம் ரூ.130 ஆகும். இந்த பேருந்துகளுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக வந்த 13 பேருந்துகளுக்கு மாற்றாக, பழைய 13 பேருந்துகள் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.அடுத்தக் கட்டமாக வரும் புதிய பேருந்துகள் பெங்களூரு, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்கு வரத்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: