ஈரோடு,
கொடுமுடி பகுதியில் ரயில்வே நுழைவு பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாநஞ்சை கொளாநல்லி ஊராட்சி பகுதியில்கொளாநல்லி, சத்திரப்பட்டி, கோம்புபாளையம் ஆகிய பகுதியில் 3 ரயில்வே கேட் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கேட்டை நிரந்தரமாக எடுத்துவிட்டு ரயில் நுழைவு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ரயில்வே கேட்டுகளை அகற்றிவிட்டு பாலம் அமைக்கும்பட்சத்தில் அறுவடை இயந்திரங்கள், லாரி போன்ற கனரக வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியாதநிலை ஏற்படும். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியதாகும்.

மேலும், அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ராட்சத குடிநீர் குழாய்கள் அந்த வழியாக செல்கிறது. அதுவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே, இந்த திட்டத்தை அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ரயில்வே சேலம் கோட்ட பொதுமேலாளர் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். மேலும், இதன்பின்னரும் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் பட்சத்தில் அப்பகுதி மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி தாலுகா செயலாளர் கே.பி.கனகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.