சென்னை,
திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் 50 வீடுகள் மொத்தம் 250 வீடுகள் ரூ.7 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்படும்.

விடுதிகளில் இரும்பு அலமாரிகள்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1,367 விடுதிகளில், தங்கிப் படிக்கும் மாணவர்கள் தங்களின் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தனித்தனி இரும்பு கதவு, பூட்டு சாவிகளுடன் கூடிய இரும்பு அலமாரிகள் அமைத்துக்கொள்ள ஒரு விடுதிக்கு ரூ. 2 லட்சம் வீதம் ரூ.27 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

ரூ. 75 கோடியில் நவீன வசதிகளுடன் கிடங்கு வளாகம்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சென்னை தெற்கு மண்டலத்திலுள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், தேவையின் அடிப்படையிலும், புறநகர் பகுதியாக மறைமலை நகரில் நவீன தொழில்நுட்பம், இயந்திர பயன்பாட்டுடன் கூடிய மூன்றடுக்கு கிடங்கு வளாகம் ரூ.75 கோடியில் கட்டப்படும். பொள்ளாட்சி, திருவாரூர், தாழையூத்து ஆகிய இடங்களில் உள்ள நவீன அரிசி ஆலை வளாகங்களில் தலா 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவில் நெல் சேமிப்பு கலன்கள் ரூ.90 கோடியில் நவீன வசதிகளுடன் அமைத்து கொடுக்கப்படும்.

புதிதாக 14 வங்கி கிளைகள்:
கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வங்கிச் சேவையினை வழங்கும் வகையில் மத்தியக் கூட்டுறவு வங்கியின் 14 கிளைகள் புதிதாக துவங்கப்படும். பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்ததிலிருந்து…

Leave A Reply

%d bloggers like this: