===சி.ஸ்ரீராமுலு====
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா என்றாலே ரசிகர்கள் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.இந்த திருவிழாவிற்காக 4 வருடம் தவமாய் தவமிருந்தது போல காலண்டர் அருகில் நாட்களை ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருப்பார்கள்.இந்நிலையில் 21-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.முதல் சுற்று,நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில்,இன்று காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்ற்ன.

மெஸ்ஸி
ரஷ்ய உலகக் கோப்பை தொடரில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி.காரணம்,உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஐந்து முறை வென்றுள்ளார்.கால்பந்து உலகில் கொடி கட்டிப் பறக்கும் மெஸ்ஸியின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 750 கோடி.பார்சிலோனா கிளப் அணியில் பட்டையை கிளப்பும் மெஸ்ஸி ரஷ்ய உலகக்கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையை பெற்று தருவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் மாஸ்கோ நோக்கி படையெடுத்தனர்.இரண்டு முறை உலக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு கடந்த முறை (2014-பிரேசில்) தலைமை பொறுப்பை ஏற்று அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார்.இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் தாக்குதல் பாணி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் கோப்பையை விட்டு கொடுத்து ஓய்வு முடிவை அறிவித்தார்.

ஓய்வு முடிவு அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் மெஸ்ஸியை சமாதனம் செய்து நட்பு ஆட்டங்களில் விளையாட வைத்தது அர்ஜெண்டினா அணி நிர்வாகம்.
ரஷ்ய உலகக்கோப்பை தொடரிலும் அர்ஜெண்டினா அணி மெஸ்ஸியின் தலைமையிலேயே களமிறங்கியது.இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட அர்ஜெண்டினா.லீக் ஆட்டங்களில் தப்பி பிழைத்து ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.ஆனால் நாக் அவுட் சுற்றில் பிரான்சிடம் சரணடைந்தது.

ரொனோல்டோ:
மெஸ்ஸியை போன்று போர்ச்சுக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கும் கால்பந்து உலகில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ரஷ்ய உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுக்கல் அணியின் மீது அதிக எதிர்ப்பரப்பு இருந்தது.ஆனால் எதிர்ப்பரப்பு தலைகீழாக மாறியது.போர்ச்சுக்கல் அணி ‘நாக் அவுட்’ சுற்று ஆட்டத்தில் மண்டியிட்டு வெளியேறியது. மெஸ்ஸி,ரொனால்டோ சிறுவயதில் இருவரும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தவர்கள்.கொடிய நோயிலிருந்து மீண்டவர்கள்.இருவரின் சாதனைகளிலும் சமமான பங்கு உண்டு.ஆனால் கிளப் அணிகளுக்கு சாதித்தது போல தங்கள் நாட்டு அணிக்காக பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்பது சோகமான விசயம்.
மெஸ்ஸி,ரொனால்டோ ஆகிய இருவரும் விளையாடிய கடைசி உலகக் கோப்பை ரஷ்ய உலகக்கோப்பை தொடர் தான் என எதிர்பார்க்கபடுகிறது.

ரஷ்ய அணி:
சொந்த மண்…. சொந்த ரசிகர்கள்…என 21-வது உலகக்கோப்பை தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் பட்டையை கிளப்பும் ரஷ்ய அணி 52 ஆண்டுகளுக்கு (சோவியத் பிரிவுக்கு பின்) பின்னர் ரஷ்ய அணி காலிறுதிக்கு தகுதி பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது.
ரஷ்ய அணி தனது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை வீழ்த்தியது கால்பந்து உலகில் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் சாம்பியன் அணிகளின் சோகம்:
1998 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வென்ற பிரான்ஸ் 2002 உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியது. 2006 ஆம் ஆண்டு நான்காவது முறையாக உலக கோப்பைக்கு முத்தமிட்ட இத்தாலி அணி,2010 ஆம் ஆண்டு தொடரில் லீக் ஆட்டத்தோடு நடையை கட்டியது. கிழக்கு-மேற்கு ஜெர்மனிகள் இணைந்த பிறகு,2014-ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி 80 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் சுற்றோடு நடையை கட்டி இந்த பட்டியலில் இடம்பிடித்தது.ஐஸ்லாந்து, பனாமா போன்ற கத்துக்குட்டி நாடுகள் இந்த முறை உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற போதிலும் நான்கு முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலி அணி உலக கோப்பையில் தகுதி பெறாமல் போனது தான் பேரதிர்ச்சி ஆகும்.

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான நெய்மரின் சிறப்பான ஆட்டத்தால் தனது பாரம்பரியத்தை நிலைநிறுத்தியுள்ளது.அனுபவ பயிற்சியாளரின் அசத்தலான கட்டமைப்பால் அசத்தும் உருகுவே அணி தனது நாக் அவுட் சுற்றில் பிரான்ஸை வீழ்த்தினால் கோப்பையை எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கபடுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.