கோயம்புத்தூர்;
நடத்துனர் இல்லாத போக்குவரத்து சேவை பலனளிக்காது என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் சாடியுள்ளார்.கோவையில் வியாழனன்று செய்தி யாளர்களைச் சந்தித்த சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது:
மானியக் கோரிக்கை மீதான கோரிக்கையில் போக்குவரத்துக் கழகத்தை மேம்படுத்தவோ, ஊழியர் களின் பிரச்சனை குறித்தோ போக்குவரத்து துறை அமைச்சர் பேசவில்லை. தொழிலாளர்களின் நிலுவைத் தொகை ரூ.5 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

தற்போது சிக்கனம் என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சேவை பயனளிக்காது. இந்த நடத்துனர் இல்லா சேவையை ரத்து செய்ய வலியுறுத்தி , வெள்ளியன்று (இன்று) சிஐடியு சங்க ஊழியர்கள் பேருந்துகளை இயக்குவதற்கு முன்பு கைகளில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பிய பின்னரே பணிக்குச் செல்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி நடத்துனர் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது எனக் குறிப்பிட்டதுடன், மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வரும்
போது கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு வலுத்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செய்தியாளர் சந்திப்பின்போது சம்மேளன துணைத்தலைவர்கள் ஏ.பி.அன்பழகன், சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: