சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களில் முடிவடைந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க
இந்நிலையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6-ம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே
120 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை தெற்கு ரயில்வே அளித்துள்ளது. இதனால்  நவம்பர் 2-ம் தேதி தொலைதூர ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் அதற்கான முன்பதிவை இன்று காலை 8 மணி முதல் செய்து கொள்ளலாம் என  அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இன்று காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது.  டிக்கெட் முன்பதிவு துவங்கிய 7 நிமிடங்களில், டிக்கெட் முடிந்தது. நவம்பர் 2 ஆம் தேதிக்கு, தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட ரயில்களில் டிக்கெட் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: