சென்னை,
மதுரை தில்லாபுரம் கிழக்கு தெருவில் வசிப்பவர் செல்வம். இவரது மகன் விக்னேஷ்
வரன் (21). இவர் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக புதன்கிழமை இரவு 11 மணிக்கு நித்யகணேஷ், வெற்றி நாராயணன், ரெய்னேஷ், பாலசுப்பிரமணி ஆகியோருடன் மாமல்லபுரத்துக்கு காரில் புறப்பட்டார். காரை வெற்றி ஓட்டிச் சென்றார். கானத்தூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் பைக் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதி, சாலை தடுப்புச் சுவரில் மோதி நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த விக்கேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த மற்றவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.