சேலம்,
சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் மாநகரில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் வியாழனன்று முதலாமாண்டு மாணவிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவி கோபிநாத் சிறப்புஅழைப்பாளராக பங்கேற்று மாணவிகளிடம் கந்துரையாடினார். அப்போது மாணவரிடையே பதின் பருவ மனநிலை, உறவுகளின் மேன்மை, சுய ஆளுமை, சுய கட்டுப்பாடு குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் செயல்படும் சிறுதுளி அமைப்பு மூலம் புனித தாமஸ்இல்லத்திற்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருட்களை கல்லூரி மாணவிகள் வழங்கினர். மேலும் கல்லூரி நிர்வாகம் சார்பில் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகளுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்பட்டது. இதில் கல்லூரி தாளாளர் செந்தில்குமார், முதல்வர் எஸ்.ஜெயந்தி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: