புதுதில்லி, ஜூலை 5-

மத்தியத் தொழிற்சங்கங்களான ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்ஸ், ஏஐயுடியுசி, டியுசிசி, எஸ்இடபிள்யுஏ, ஏஐசிசிடியு, யுடியுசி, தொமுச மற்றும் எம்இசி முதலான சங்கங்களின் சிறப்பி மாநாடு தில்லியில் ஜூன் 2 அன்று நடைபெற்றது. தில்லியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து, சிறப்பு  மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பின்னர் வரும் ஜூலை 20 ஆம்  தேதியன்று தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தில்லி முதலமைச்சருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் ஜூன் 27ஆம் தேதியே அனுப்பப்பட்டுவிட்டது என்றும் மாநாட்டில் கூறப்பட்டது. ‘

கோரிக்கைகள் வருமாறு:

 1. இன்று பணவீக்கம் உயர்ந்துள்ள நிலையில் குறைந்தபட்ச ஊதியமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கிடு. ‘
 2. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்து. அனைத்துத் தொழிலாளர்களுக்கும், குடும்பத்தினருக்கம் ரேஷன் அட்டைகள் வழங்கிடு.
 3. வேலையிடங்களில் பாதுகாப்புஅம்சங்களைக் கறாராக அமல்படுத்து. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராகப் பின்பற்று. தொழிற்சங்கங்கள், தொழிலாளர்நலச் சட்ட விதிகளின்படி 45 நாட்களுக்குள் பதிவு செய்.
 4. தில்லி அரசாங்கம் நியாயமான முத்தரப்புக் குழுக்களை அமைத்திட வேண்டும்.
 5. மத்திய அரசாங்கம், தொழிலாளர்நலச் சட்டங்களில் கொண்டுவந்துள்ள தொழிலாளர் விரோத ஷரத்துக்களை விலக்கிக்கொள்ள வேண்டும். ‘நிரந்தர ஊதிய வேலைவாய்ப்பு‘ (‘Fixed Term Employment’) கைவிடப்பட வேண்டும்.
 6. நிரந்தர வேலையில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காதே. ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திடு. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து ஊழியர்களுக்கும் சம ஊதியம் வழங்கிடு.
 7. தொழிலாளர்நலத்துறையில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரமாக நியமித்திடு. அதன் வேலைகளில் முன்னேற்றம் கொண்டுவா. ஊழலைத் தடுத்துநிறுத்து. தொழில்தகராறுகளை தொடர்ந்து நீட்டித்துக்கொண்டிராதே. தொழிலாளர் தாவாக்களை மாவட்ட நீதிமன்றங்களுக்கு அனுப்பிடு.
 8. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கிடு. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து.
 9. போனஸ் உச்சவரம்பை அதிகரித்திடு. பணிக்கொடை மற்றும் போனசுக்கு இருந்திடும் தடையை நீக்கிடு.
 10. ஆண் – பெண் பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்திடு. பெண்களுக்கு சிறப்புப் பாதுகாப்பு வழங்கிடு. பெண் தொழிலாளர்களுக்குப் போதுமான விடுதிகளை நிர்மாணித்திடு. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு. ஒவ்வொரு நிறுவனத்திலும், போதுமான அளவிற்கு பெண்களுக்கான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திடு. குழந்தைகளுக்கான காப்பகங்களை (creches) அமைத்திடு. ஒவ்வொரு நிறுவனத்திலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக முறையீட்டுக் குழுக்களை அமைத்திடு.
 11. அங்கன்வாடி, ஆஷா தொழிலாளர்கள் மற்றும் மதிய உணவு தொழிலாளர்கள்போன்ற திட்ட ஊழியர்களை நிரந்தரமான அரசு ஊழியர்களாக்கிடு. அதுவதைர அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் அளித்திடு.

12. தலையில் சுமந்து வியாபாரம் செய்வோர், மற்றும் தள்ளுவண்டி மூலம் வியாபாரம் செய்வோர் அனைவரையும் பதிவு செய்து, உரிமங்கள் வழங்கிடு. ‘அழகு நகரம்’ உருவாக்குகிறோம் என்ற பெயரால் சுமைதூக்கும் தொழிலாளர்களையும், தள்ளுவண்டி வியாபாரிகளையும் அப்புறப்படுத்தாதே.‘13. கட்டுமானத் தொழிலாளர்களை 30 நாட்களில் பதிவு செய்திடு. 14. கல்வி, சுகாதாரம், மின்சாரேம், தண்ணீர் விநியோகம், பேருந்து போக்குவரத்து மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கத் தாரை வார்க்காதே.   15. தில்லி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்து.16. தில்லி மெட்ரோ மேலாண்மை ஊழியர்களுக்கு தொழிற்சங்க உரிமைகளை வழங்கிடு. 17, மதவெறி, சாதி வெறி அடிப்படையில் பாகுபாடுகள் நடப்பதைத் தடுத்திடு.18. உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்காதே. மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளை திறமைமிகு ஊழியர்களாக அங்கீகரித்திடு. எட்டு மணி நேர வேலை ஒதுக்கிடு. 19, ஓட்டல் தொழிலில் 10 சதவீத சேவைக் கட்டணம் கொண்டுவா. அதன் பயன்களை ஊழியர்களுக்கு வழங்கிடு. 20. பாதுகாப்பு ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை உருவாக்கி, அவர்களுக்கென்று தனி வாரியம் அமைத்திடு. 21. வீடுகளில் வேலை செய்திடும் ஊழியர்களுக்கு சட்டமியற்றிடு. அவர்களுக்கும் ஊழியர்களுக்கான அந்தஸ்து அளித்திடு. (ந,நி,)

Leave a Reply

You must be logged in to post a comment.