தீக்கதிர்

அரசு ஊழியர்க்கு போதை மருந்து சோதனை..!

அமிர்தசரஸ்:
பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்குப் போதை மருந்து சோதனை நடத்தப்படுவது கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். காவல்துறை பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றும், பணியில் சேர்ந்தது முதல் ஒவ்வொரு நிலையிலும் இந்தச் சோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.