திருவண்ணாமலை,
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வட்டாட்சியர் கு.மனோகரன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர்அரக்குமார் முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலராமன், அழகேசன், சக்ரவர்த்தி, மற்றும் விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் முழக்கமிட்டனர். பின்னர்எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளியேறி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: