திருப்பூர்,
திருப்பூரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பட்டியலின / பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துபோக செய்வதற்கு அவசரச் சட்டம் பிறப்பித்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முகமது ஜாபர், மாநில உதவி செயலாளர் சுப்பிரமணியன், கிளை செயலாளர்கள் விஸ்வநாதன்,குமரவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுக்காக்க வேண்டும் என முழங்கங்கள் எழுப்பினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: