அகர்தலா:
வதந்திகளின் பெயரால் மனிதப் படுகொலைகள் நடப்பதற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திரிபுராவில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில், செவ்வாய்க்கிழமையன்று நடைப்பெற்ற இந்த பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மனிதப் படுகொலைகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
பேரணியின் நிறைவாக பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பிஜன் தார் சிறப்புரையாற்றினார்.

அப்போது, ‘வதந்திகளின் அடிப்படையில், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதுபோல, மிகவும் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிட்ட மாநில சட்ட அமைச்சர் ரந்தன் லால் நாத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும்; வதந்திகளின் அடிப்படையில் அப்பாவி மக்களைக் கொலை செய்த கயவர்களைக் கைது செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்ற இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முறையீடு தாக்கல் செய்தால் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்து பாரபட்சமாக நடந்துகொள்ளும் திரிபுரா மாநில காவல்துறைக்கும் பிஜன் தார் கண்டனம் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.