அகர்தலா, ஜூலை 4-

வதந்திகளின் அடிப்படையில் மக்கள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக செவ்வாய் அன்று திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் நிறைவாக நடைபெற்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பிஜன் தார், மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார். முதலாவதாக, வதந்திகளின் அடிப்படையில், எரிகிறி கொள்ளிக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல, மிகவும் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிட்ட மாநில சட்ட அமைச்சர் ரந்தன் லால் நாத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, வதந்திகளின் அடிப்படையில் அப்பாவி மக்களைக் கொலை செய்த கயவர்களைக் கைது செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முறையீடு தாக்கல் செய்தால் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்து பாரபட்சமாக நடந்துகொள்ளும் காவல்துறையைக் கண்டிப்பதாகும்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.