சென்னை,
கடலூர் மாவட்ட முந்திரி கூலித் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் சப.ராஜேந்திரன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், “தமிழ்நாடு உடல் உழைப்பு சமூக பாதுகாப்பு தொழிலாளர் நல வாரியத்தில் முந்திரி தொழில் உள்ளிட்ட 69 தொழிலினங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் முந்திரி தொழிலாளர்கள் இதுவரைக்கும் 14,039 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 4,941 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரிய அனைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, கடலூர் மாவட்ட முந்திரி கூலித் தொழிலாளர்ளுக்கென தனியாக நல வாரியம் அமைக்க வேண்டியது இல்லை” என்றார்.