சென்னை,
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் இராசாமி,“ மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அவரது கொள்கைகளை ஆய்வு செய்யும் வகையில் இருக்கை அமைக்க வேண்டும்” என்றார்.

திமுக உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்,“ இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியடிகளின் 150 வது பிறந்த தின விழாவை மத்திய அரசு சிறப்பாக கொண்டாட உள்ளது. மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு மாநில அரசு சார்பில் கடந்த 2012ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் நிதி உதவி செய்யப்பட்டது. அதன் பிறகு, படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 39 லட்சம் வரைக்கும் கடனில் உள்ளது. அந்த தொகை விடுக்க வேண்டும்” என்றார்.இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பாண்டியராஜன்,“மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் காமராஜர் பெயரில் தமிழ் இருக்கை அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்” என்றார். மதுரையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு பிரதமரிடம் ரூ. 10 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது என்றும் உறுப்பினர் தெரிவித்த அந்த கடன் தொகை மிக விரைவில் விடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: