அகர்தலா :

திரிபுரா சுதந்திர மக்கள் முன்னணியுடன் பாஜக கூட்டணி அமைத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றனர். ஆனால் தேர்தலின் போதும், கூட்டணி அமைத்த போதும் பாஜக அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதனால் திரிபுரா சுதந்திர மக்கள் முன்னணி கடும் விரக்த்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பாஜக தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி 2019 நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என திரிபுரா மக்கண் முன்னணி அறிவித்துள்ளது.

பாஜகவின் மதவெறி மற்றும் மக்கள் விரோத கொள்கையால் நாடு முழுவதும் மோடி அரசு மீதான அதிருப்த்தி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவிற்கு எதிராக அணி திரண்டு வருகின்றன. இந்நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளும் ஒவ்வொன்றும் பாஜகவிடம் இருந்து ஒதுங்கி வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது திரிபுரா சுதந்திர மக்கள் முன்னணியும் இடம்பெற்றிருக்கிறது.  அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் மங்கள் தேபர்மா அறிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.