பழனி முருகன் கோயிலில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.  பல முக்கிய ஆவணங்கள்  தீயில் எரிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குளிர் சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: