பாட்னா:
பீகார் மாநிலத்தில் பிளஸ் 2 கல்வித் தகுதி அளவிலான பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு, பி.எச்டி. பி.டெக்., எம்.டெக். படித்தவர்கள் கூட விண்ணப்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், வெறும் 4 ஆயிரத்து 257 இடங்களுக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்திருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பீகார் மாநில அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர் பணிக்கான 4 ஆயிரத்து 257 இடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்த நிலையில், 5 லட்சம் பேர் விண்ணப்பித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான நபர்கள் விண்ணப்பம் அளித்திருப்பதாகவும், இவர்களில் 80 சதவிகிதத்தினர், பிஎச்டி, பி.டெக்., எம்.டெக். படித்தவர்களாக இருக்கின்றனர் என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விண்ணப்பம் அனுப்பியிருப்பவர்களில் 83 சதவிகிதம் பேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால், எந்த வேலையும் கிடைக்காத போது, ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் சரி என்ற நோக்கத்திலேயே பள்ளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்ததாக பொறியியல் பட்டதாரிகள் கவலையுடன் பேட்டி அளித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: