ஐதராபாத்,
தெலுங்கானாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்
சிலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலிஎண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மின்கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: