கோவை;
கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறை சீல் வைத்த வீட்டிற்குள் நுழைந்து குட்கா பொருட்களை எடுக்க முயற்சித்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணாநகரில் திங்களன்று ஒரு வீட்டில் இருந்து 2 டன் குட்கா, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த உணவுப்பாதுகாப்புத் துறையினர் அந்த வீட்டிற்கு சீல் வைத்தனர். உரிமையாளர் அசோக் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.இந்நிலையில் அவர் செவ்வாயன்று இரவு வீட்டிற்குள் நுழைந்து குட்கா, புகையிலைப் பொருட்களை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செல்வபுரம் காவல்துறையினர் அசோக்கை கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: