திருவண்ணாமலை,
8வழிச் சாலைக்கு எதிராக செயல்படுபவர்களையும், கருத்து தெரிவிப்பவர்களையும், காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் கூட கைது செய்கின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் தமாகவே முன்வந்து, சாலைக்கு நிலம் வழங்குவதாகவும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு போராட்டத்தை தூண்டும் வகையில், சமூக வலைத் தளங்களில் தகவல்களை பரப்புவதாக கூறி திருவண்ணாமலை பேகோபுரத் தெருவை சேர்ந்த விஜயகுமார், வேளுகனந்தல் பகுதியை சேர்ந்த மணிகண்டன், பவன்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் புதன்கிழமையன்று திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விக்னேஷ் பிரபு, கைது செய்யப்பட்டுள்ள விஜயகுமார், பவுன் குமார், மணிவண்ணன் ஆகிய மூவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.