புதுச்சேரி,
ஆளுநர்களுக்கு தனிபட்ட அதிகாரம் இல்லை என்பதை நான் கூறி வந்ததை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உச்ச நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு புதுச்சேரிக்கு100க்கு 110 சதவீதம் பொருந்தும். புதுச்சேரியில் நான் பதவியேற்றதிலிருந்து துணைநிலை ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்று அதிகார வரம்பு தொடர்பாக 19 முறை கடிதம் எழுதியுள்ளேன். எந்த பகுதிக்கும் தனியாக சென்று பார்ப்பதற்கு உரிமை உள்ளது என்றும் உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறினேன். இவை அனைத்தும்உச்சநீதிமன்றம் தீர்ப்பில் பிரதிபலித்துள்ளது.மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது.அமைச்சரவை எடுக்கும் முடிவை அனுப்ப வேண்டுமே தவிர அதில் கை வைக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை.

ஆளுநருக்கு உள்ள அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. கோப்புகள் அனுப்பும்போது காரணங்கள் சொல்லி திரும்பி அனுப்ப துணைநிலை ஆளுநருக்கு அதிகாரங்கள் இல்லை நீதிமன்றம் அதை வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக கூறியிருப்பது துணைநிலை ஆளுநருக்கு முடிவெடுக்க தனிப்பட்ட அதிகாரம் இல்லை…முழு அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது. இவை அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர் பிரதமர் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்த தரப்பிலும் சரியான பதிலும் நடவடிக்கையும் இல்லை.. இந்த சூழ்நிலையில் இது வரவேற்க தக்க தீர்ப்பு. புதுச்சேரி மாநிலத்திற்கும் இது பொருந்தும் என தீர்ப்பில் கூறுப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநர் அதிகாரிகளை அழைத்து தினமும் கூட்டம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

கோப்புகள் தொடர்பாக விளக்கம்வேண்டுமென்றால் துறை செயலர் அழைத்து பேசவேண்டும்.அப்படி செல்லும் போது துறை அமைச்சரை சந்தித்த பின் தான் செல்ல வேண்டும்..இது தொடர்பாக அதிகாரிகளுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை யார் மீறினாலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தான் முதலில் தொடர்வேன். இந்த தீர்ப்புமக்களே முக்கியம்.மக்களாட்சி தத்துவத்திற்கே முன்னுரிமை என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.