புதுதில்லி;
தான், இந்தியாவுக்கு திரும்புவதாக கூறப்படும் தகவல் ஆதாரமற்றது; என்றும், இப்போதைக்கு நாடு திரும்புவது சாத்தியமில்லை என்றும் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் ஜாகீர் நாயக். இஸ்லாமிய மார்க்க அறிஞர். தீவிரமான மதப்பிரச்சாரகரும் கூட. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர், பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாகவும், அதற்கு நிதியுதவி அளித்ததாகவும்- மோடி ஆட்சிக்கு வந்த பின்னணியில், தேசிய புலனாய்வு முகமையால் குற்றச்சாட்டுக்கு உள்ளானார். அவரது நிறுவனத்திற்கு மோடி அரசு தடையும் விதித்தது. இதனிடையே, வெளிநாடு சென்ற ஜாகீர் நாயக் மீண்டும் இந்தியா திரும்பவில்லை. அண்மையில் நேரில் ஆஜராகுமாறு, ஜாகீர் நாயக்கிற்கு, நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ஜாகீர் நாயக் பதில் எதுவும் அளிக்கவில்லை. ஆனால், ஜாகீர் நாயக் இந்தியா திரும்பப் போவதாக சில நாட்களாக செய்திகள் வெளியாகின. ஆனால், ஜாகீர் நாயக் அதை மறுத்துத்துள்ளார்.

‘இந்தியாவுக்கு நான் வருவதாக கூறப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது, பொய்யானது; நான் நியாயமற்ற வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன்; எனக்கு பாதுகாப்பு இருப்பதாக உணரவில்லை; இந்த அரசாங்கம் நியாயமானது மற்றும் உண்மையானது என்று நான் உணரும்போது, நான் நிச்சயமாக எனது தாயகத்திற்குத் திரும்புவேன்; அதுவரை நான் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த திட்டமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.