தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நத்தம் கிராம தலித் இளைஞர் இளவரசனின் 5 ஆம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அவரது குடும்பத்தாரும், கிராம மக்களும் மரியாதை செலுத்தினர்.

தருமபுரி அருகே உள்ள நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன், செல்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவை 2012-ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் சாதி ஆதிக்க சத்திகளால் நத்தம் அண்ணாநகர், கொண்டம்பட்டி கிராமங்கள் சூரையாடப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள்தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில் 2013-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி இளவரசன் தருமபுரி அரசு கல்லூரி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இளவரசன் 5 ஆம் ஆண்டு நினைவுதினத்தை யெட்டி நத்தம் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் இளவரசன் குடும்பத்தாரும், கிராம மக்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.இதற்கிடையே இளவரசன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த தருமபுரியில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்ற தலித் விடுதலை கட்சியின் தலைவர் செங்கோட்டையன் உள்ளிட்ட 42 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: