திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 வழிச் சாலை அமைப்பதற்கான அளவீடு பணிகளை அதிகாரிகள் காவல்துறை துணைக் கொண்டு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்யாறு அடுத்த எரும வெட்டி கிராமத்திலும், கலசப்பாக்கம் அடுத்த சாலையனூர் கிராமத்திலும் நிலம் அளவு எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். எருமவெட்டியில் விவசாயிகள் மணிவண்ணன், சண்முகம், முருகன் ஆகியோர் தங்களுடைய விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிராமத்திற்கு தேவையான அரசு ஆரம்பப் பள்ளிக் கூடம் இந்த திட்டத்தால் இடிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். போராடிய விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது, விவசாய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் மேல் மண்ணெண்ணை ஊற்றியும், தங்களது கழுத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதேபோல் தென் மாவந்தல் கிராமத்தில் நிலம் அளவை பணி நடைபெற்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயி கிருஷ்ணன் (70) கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுட்டார். உடனே அருகே இருந்தவர்கள் கிணற்றில் குதித்து அவரை மீட்டனர். இதேபோல் சாலையனூர் பகுதி விவசாயிகளும் தங்களது நிலங்களை பாதுகாக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: