தேனி:
தேனி மாவட்டம் போடி நகராட்சி 1-ஆவது வார்டு புதூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரயில்வே புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனர். தற்போது போடி- மதுரை அகல ரயில் பாதை பணி நடைபெற்று வரும் நிலையில் குடியிருப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் முயற்சிசெய்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி மக்கள் தங்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கக் கோரி வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில் போடியிலிருந்து ஊத்தாம்பாறை செல்லும் வலசத்துறை சாலையில் வண்டிப்பாதை புறம்போக்கில் பல விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை ஒட்டி மீதமிருந்த இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வட்டாட்சியரிடம் உரிய மனு கொடுத்தவுடன் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர், காவல்துறையினர் உறுதியளித்தனர்.

மனுக் கொடுக்கும் போராட்டம்                                                                                                                                                              இந்நிலையில் போடி வட்டாரத்தில் வீடு இல்லாத மக்களையும், போடி புதூர் பகுதியில் ரயில்வே புறம்போக்கில் குடியிருந்து வரும் மக்களையும் இணைத்து தமிழ்நாடு
விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனுக் கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் ரயில்வே புறம்போக்கில் குடியிருந்து வரும் மக்களும், போடி நகர் பகுதியில் வீடு இல்லாத மக்களும், சிலமலை, சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், மேலசொக்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, டொம்புசேரி, அம்மாபட்டி உள்ளிட்ட கிரா
மங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் திரண்டு போடி வட்டாட்சியர் அலு
வலகத்திற்கு புறப்பட்டனர். அங்கு மனுக்களை வாங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்யாத வட்டாட்சியர், வெளியில் உள்ள வெளி கேட்டை மூடி விட்டு, உள்ளே இருந்து கொண்டு மனு வாங்குவதாக கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்கள், மனுக்களை கொடுக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து மக்களை, அலுவலக வளாகத்தில் வரவழைத்து மனுக்களை பெற்றுக் கொண்டார். காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்டத் தலைவர் கே.தயாளன், மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், தாலுகாத் தலைவர் மூக்கையா, தாலுகாச் செயலாளர் எஸ்.கே.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகாச் செயளர் எஸ்.செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தங்கபாண்டி, மீனா, விவசாயத் தொழிலாளர் சங்க தாலுகாத் தலைவர் போஸ், செயலாளர் செல்வராஜ், சிஐடியு செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளனோர் கலந்து கொண்டனர்.
அனுமதி மறுத்த காவல்துறை  கட்டபொம்மன் சிலையிலிருந்து ஊர்வலமாக செல்ல அனுமதி மறுத்த காவல்துறையினர், ஒலிப்பெருக்கி வைத்துக் கொள்ளவும் தடை செய்தது. இதனால் தன்னெழுச்சியாக வந்த மக்களை ஒழுங்குப்படுத்த முடியவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.