ஸ்ரீநகர்;
காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக- அவரது மக்கள் ஜனநாயக கட்சியை (பிடிபி) சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலரை பாஜக வளைத்துப் போட்டுள்ளது. இவர்கள் மெகபூபாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதாவது, மெகபூபாவை ஓரம்கட்டி விட்டு, அந்த கட்சி எம்எல்ஏ-க்கள் மூலம் காஷ்மீரில் மீண்டும் கூட்டணி அரசை அமைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதனொரு பகுதியாகவே கட்சியை உடைக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.