சென்னை,
போக்குவரத்தினை மேம்படுத்திட மாவட்ட அளவில் பணிக்குழு உருவாக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

பேரவையில் தமது துறை மானியத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: சென்னையில் மின்கலன் (பேட்டரி) அல்லது மின்சாரத் தில் ஓடும் பேருந்துகள் இயக்குவதற்கான விரிவான திட்டம் செயல்படுத்தப்படும். மாநில அளவில் மேம்படுத்தப்பட்ட நிலையான இயக்க கொள்கை உருவாக்கப்படும். அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கான விரிவான புதிய கொள்முதல் கொள்கை அறிமுகப்படுத் தப்படும். விபத்து இழப்பீடு, விபத்துத் தடுப்பு மற் றும் சுங்கக் கட்டணங்கள் ஆகியவற்றை நிர்வகித்திடும் பொருட்டு, அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கான ஒருங்கிணைந்த அமைப்பு (அ) அறக்கட்டளை உருவாக்கப்படும்.

நவீன தொழில்நுட்ப வசதி மூலம், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், பேருந்துகளின் வருகை நேரத்தினை பயணிகள் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப் படும். பொது போக்குவரத்துகள் ஒருங்கிணைக்கப்படும். அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ.2.30 கோடி செலவில் பொருத்தப்படும். போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பான பணிகளுக்கு செலுத்தும் அனைத்து கட்டணங்களும் ரொக்கமில்லாத பரிவர்த்தனையாக இணையதளம் வாயிலாக வசூலிக்கப்படும். பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், மேல்லொப்பம் செய்தல், ஓட்டுநர் உரிமத்தில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்களுக்கு ஒரு மணி நேரத்தில் செய்து கொடுக்கப்படும். இணையதளம் வாயிலாக நடத்துநர் உரிமம் வழங்கப்படும்.

Leave A Reply

%d bloggers like this: