திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டுக்கு உட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரக்கோரி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் என்.சேகர் தலைமையில் திங்களன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், மாநகராட்சி 4வது மண்டல உதவி ஆணையர் கண்ணன் அளித்த புகாரின் பேரில், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏஐடியுசி மாவட்ட செயலாளர் என்.சேகர் உள்ளிட்ட 10 பேர் மீது திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.