====எம்.கண்ணன், என்.ராஜேந்திரன்====
பழைய மொபைல் ஃபோனிலிருந்து புதிய ஃபோனுக்கு மாறப்போகிறீர்களா? அப்படியானால் சில அடிப்படை விஷயங்களை தெரிந்து செயல்படுத்திக் கொள்வது அவசியமாகும். ஏன் மாற்றுகிறீர்கள்?

உங்களது பழைய ஃபோன் பழுதடைந்ததாலோ, உடைந்ததாலோ மாற்றுவதாக இருந்தால் உங்கள் டேட்டாக்களை கணினி மூலமாகவோ நம்பிக்கையான வேறு வழிகளைப் பயன்படுத்தியோ பேக்கப் செய்ய முயற்சி செய்யவும். பழைய ஃபோனைக் கொடுத்து புதிய ஃபோன் வாங்கும் எக்ஸ்சேன்ஜ் முறையில் மாற்றுவதாக இருந்தால் போனின் இன்டெர்னல் மெமரியில் நீங்கள் பதிந்து வைத்த படங்கள், கணக்கு விபரங்கள், எஸ்.எம்.எஸ். செய்திகள், தொடர்புகள் ஆகியவற்றை பேக்கப் செய்து விட்டு அழித்துவிடவும். செயலிகள், கேம்கள், மின்னஞ்சல், சமூக வலைத்தள கணக்குகள் ஆகியவற்றிலிருந்தும் வெளியேறவும். இதனை ஒரே கிளிக்கில் செய்ய ஃபோன் Reset முறையைப் பயன்படுத்தி எளிதாக செய்யலாம். ஃபோன் ரீசெட் கிளிக் செய்யும் முன் தேவையான அனைத்து டேட்டாக்களையும் மெமரி கார்டுக்கு பேக்கப் செய்து விட்டீர்களா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். கால விரையம் ஆகிறதே என்று கவலைப்படாதீர்கள். இது உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பானது என்பதால் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பது அவசியம்.

பேக்கப் செய்வது எப்படி?
சாதாரண ஃபோனிலிருந்து ஸ்மார்ட் ஃபோனுக்கு மாறுபவராக இருந்தால் அலைபேசித் தொடர்புகளை செட்டிங்ஸ் பகுதியில் எக்ஸ்போர்ட் பகுதியில் மெமரிக் கார்டு அல்லது சிம்கார்டுக்கு பேக்கப் செய்து கொள்ளவும். பழைய ஃபோனை நீங்களே வைத்திருப்பதானால் பிரச்சனையில்லை. வேறு ஒருவருக்கு கொடுப்பதாக இருந்தால் மேற்சொன்ற ரீசெட் முறையைப் பின்பற்றி டேட்டாக்களை அழித்துவிட்டுக் கொடுக்கவும்.
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் பேக்கப் செய்ய சுலபமான வழியாகக் கொடுக்கப்பட்டிருப்பது கூகுள் டிரைவ் ஆன்லைன் சேமிப்பகத்திற்கு தரவுகளை அனுப்பும் வசதிதான்.Settings சென்று Backup & Reset என்பதில் நுழைந்தால் உங்கள் கூகுள் மின்னஞ்சல் கணக்கைக் கொடுத்து கூகுள் டிரைவில் ஃபோனில் உள்ள தரவுகளை பதிவேற்றலாம். இதற்கு தரவு அளவைப் பொறுத்து இணைய டேட்டாவை செலவழிக்கவேண்டியிருக்கும்.
மெமரி கார்டிற்கு தரவுகளை மாற்றுவதற்கு பழைய ஆண்ட்ராய்டில் சிறிது கஷ்டப்படவேண்டியிருக்கும். புதிய ஆண்ட்ராய்ட் பதிப்புகளில் எளிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் வேகமாகவும் எளிதாகவும் அனைத்துத் தரவுகளையும் மெமரி கார்டு அல்லது மற்றொரு ஃபோனிற்கு Wifi மூலமாக பகிர்வதற்கான வழிகளை மேற்கொள்ள செயலிகளின் உதவியையே நாடவேண்டியதிருக்கும்.

பேக்கப் செயலிகள்
App / SMS / Contact – Backup & Restore என்று பெயரிடப்பட்ட இந்த செயலியை ஃபோனில் நிறுவிக் கொண்டால் கூகுள் டிரைவிற்கு மட்டுமல்லாமல் மெமரி கார்டு, USB, OTG பென்டிரைவ் ஆகிய வழிகளில் தரவுகளை சேமிக்கலாம். பழைய ஃபோனிலிருந்து புதிய ஃபோனிற்கு நேரடியாக தரவுகளை மாற்ற இரண்டு ஃபோனிலும் செயலியை நிறுவிக் கொண்டு Wifi Hotspot வசதியின் மூலமாக தரவுகளைப் பகிர்ந்து கொள்ளமுடியும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய https://play.google.com/store/apps/details?id=mobi.infolife.appbackup
Super Backup & Restore என்ற இந்தச் செயலியும் ஃபோனில் உள்ள தரவுகளை சேமிக்க உதவுகிறது.இதனையும் பயன்படுத்தி பார்க்கலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.idea.backup.smscontacts

மேற்கண்ட செயலிகளில் விளம்பரங்கள் இடையிடையே காட்டப்படுவது இடையூறாக உள்ளது. கட்டணத் திட்டத்தில் இணைந்தால் விளம்பரம் இல்லாமல் செயலிகளைப் பயன்படுத்தலாம். தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோர் தரவுகளை பதிவிறக்கம் செய்த பிறகு செயலியை நீக்கிவிடலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.