கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களிள் தகவல்  மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற கொள்கையை கைவிட்டதாக வால் ஸ்டீரிட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது ஜி-மெயில் சேவையை 1.4 பில்லியன் பயனர்களுக்கு அளித்து வருகிறது. இந்நிறுவனம் தனது பயனர்களின் மெயிலை அணுக 100க்கும் மேற்பட்ட மூன்றாம் தரப்பு செயலிகள், மற்றும் டெவலப்பர்கள் அனுமதி அளித்துள்ளது. அறிக்கையின்படி கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் பயனர்களின் மெயிலை தினமும் படிக்கின்றனர். மெயிலில் உள்ள குறைகளை சரிசெய்யவும், அதனை மேம்படுத்தவும் இவ்வாறு செய்கின்றனர். இதற்கான மென்பொருளை பயன்படுத்தி பயனர்களின் தகவல்களை பெறுகின்றனர். இந்த தகவல்களை தனிநிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். குறிப்பாக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் வியபாரத்திற்காக இந்த தகவல்களை அதிக விலைக்கு விற்று வருகின்றனர்

கூகுள் சமீபத்தில் அண்ட்ராய்டு பயனர்களுக்கான புதிய வசதிகளை அறிமுக்கப்படுத்தியது. அதில்  ஜிமெயில் கணக்குகளைத் தொடரவும், பாதுகாக்கவும் மற்றும் தனியுரிமை விருப்பங்களை மறுசீரமைப்பு செய்யவும் எளிதாக்கியிருப்பதாக கூறியது. அந்த வசதிகளை பயனாளர்கள் பயன்படுத்தும் போது அதில் இருந்து அனைத்து தகவல்களையும் கூகுள் நிறுவனம் மீண்டும் புதுப்பித்து அதனை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருவதாக வால்ஸ்டீர்ட் பத்திரிகை நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இது கூகுள் பயனாளர்கள் மத்தியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.