கடலூர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) கடலூர் மண்டலத் தலைவரும், சிஐடியு மாவட்ட தலைவராக பணியாற்றும் ஜி.பாஸ்கரன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாநடைபெற்றது.

கடலூர் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் சிறப்புத் தலைவர் எம்.முத்துக்குமரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஏ.ஜான்விக்டர் வரவேற்றார். பொருளாளர் கே.குணசேகரன், துணைப்பொதுச் செயலாளர் பி.கண்ணன், துணைத்தலைவர்கள் பி.எழிலரசன் ஜி.மணிவண்ணன் ஏ.எஸ்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன், சிங்காரவேலர் அறக்கட்டளை நிறுவனர் தலைவர் வீ கலியபெருமாள், மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் சம்மேளன தலைவர் ஏ.அன்பழகன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், சிஐடியு மாவட்ட செயலாளர் பி.கருப்பையன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுதியுள்ள ‘ஜி.பாஸ்கரனின் மிச்சமிருக்கும் நினைவுகள்’ என்ற நூலை அ.சவுந்தரராசன் வெளியிட ரெட்டியார்பட்டி பி.ஏழுமலை பெற்றுக்கொண்டார். பணிநிறைவு யொட்டி ஜி.பாஸ்கரன் ஐநாவரம் பள்ளி நிதியாக ரூ.20 ஆயிரத்தை நோட்டுமாலையாக அ.சவுந்தர்ராசனிடம் வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினரும் நிதி வழங்கினார்கள்.இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தை கடலூரில் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார். சங்கத்தின் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.