சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 21,744 பேருந்துகளை, நாள்தோறும் 87.22 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கி வருகிறது. 1 கோடியே 80 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து சேவையின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும், இந்த சேவையை விரிவுப்படுத்தி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு (சென்னை) 40 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 60, சேலம் கழகத்திற்கு 78 , கோவைக்கு 172, கும்பகோணத்திற்கு 64, மதுரைக்கு 32, திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 69 என மொத்தம் 515 பேருந்துகள் ரூ. 134 கோடியே 53 லட்சம் செலவில் புதிதாக மக்களின் பயன் பாட்டிற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்புதிய பேருந்துகளில், அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதன் முறையாக, குளிர்சாதன வசதி படுக்கையுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், கழிவறை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள் ஆகிய பேருந்துகளும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர் கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: