புதுதில்லி:
வங்கிகளில் கடன்வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பொருளாதாரமும் வர்த்தகமும் பாதிக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கண்ணீர் விட்டுள்ளார்.மத்திய பாஜக ஆட்சியில் வராக்கடன் பல மடங்கு அதிகரித்து விட்டது. லலித் மோடி துவங்கி, நீரவ் மோடி வரை பலரும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டனர். அவர்களைக் கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இண்டர்போல் போலீஸ் உதவி நாடப்பட்டு, ரெட் கார்னர் நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வங்கி மோசடிப் பேர்வழிகளைக் காப்பாற்றும் வகையில், ‘தொழிலபதிபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும்’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கவலை தெரிவித்துள்ளார்.

‘ஒரு தொழிலதிபர் கடன் வாங்குவது, தனது வர்த்தக முன்னேற்றத்திற்காகத்தான் என்பதை வங்கி அதிகாரிகள் மனத்தில் கொள்ள வேண்டும்; அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவர்களிடம் அதற்கான காரணத்தைத்தான் கேட்டறிய வேண்டும்; இன்னும் கூறினால், அவர்கள் கூறும் காரணம் உண்மையாக இருப்பின், அவர்களை மன்னிக்க வேண்டும்; அதுதான் ஜனநாயக முறை; அதை விடுத்து, கடனைத் திருப்பித் தராததற்காக தொழிலபதிபர்களை கைது செய்வது மிகவும் தவறாகும்’ என்று முதலாளிகள் மீது கட்கரி தனது விசுவாசத்தைப் பொழிந்துள்ளார்.‘கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், தொழிலதிபர்கள் தங்களின் தொழில் முயற்சியிலிருந்து பயந்து பின்வாங்கி விடுவார்கள்: இதனால் வர்த்தகம் முடங்கி, பொருளாதாரம் வீழ்ச்சி அடையும்’ என்றும் அக்கறைப்பட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: