சென்னை :
தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய திமுக உறுப்பினர் துரை சந்திரசேகரன், “தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் விவசாயக் கல்லூரி அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்பு
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக் கண்ணு,“ புதிதாக ஒரு வேளாண்மை கல்லூரி துவங்குவதற்கு குறைந்தது 110 ஏக்கர் விவசாய நிலம் ஒரு பட்டப் படிக்கு தேவைப்படுகிறது. ஒவ் வொரு பட்டப் படிப்பிற்கும் 110 ஏக்கர் விவசாய நிலம் தேவையாகும். திருவையாறுக்கு அருகில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் ஈச்சங் கோட்டையில் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் நாவலூர் குட்டப்பட்டில் அன்பின் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மகளிருக்கான தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளூரில் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

திருவையாறில் தொகுதிக் குட்பட்ட பூதலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரி செயல் பட்டு வருகிறது. திருவையாறு தொகுதி மாணவர்கள் இந்த கல்லூரியில் சேர்ந்து பயன் பெறலாம். என்றும் தஞ்சாவூரில் மண், நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையமும், ஆடுதுறையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையமும் செயல்பட்டு வருகின்றன. ஆகவே விவசாயிகள் தங்கள் பயிர்களை ஆலோசனைகளை மேற்கூறிய கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலைகளில் பெறலாம்” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: