பாங்காக் :

தாய்லாந்தின் சாங் ராய் என்ற இடத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தில் சிறுவர் கால்பந்து வீரர்கள் 12 பேரும்(11 வயது முதல் 16 வயது வறையிலானவர்கள்), அந்த அணியின் பயிற்சியாளர் ஒருவரும் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி குகை ஒன்றினுள் அடித்து செல்லப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியை தாய்லாந்து அரசு முடுக்கிவிட்டது. மேலும், உலகின் பல இடங்களில் இருந்து வந்த மீட்புக்குழுக்கள் சில தாய்லாந்தின் மீட்பு படையினருடன் கைகோர்த்தனர்.

இதையடுத்து நேற்று இங்கிலாந்திலிருந்து வந்த மீட்பு குழு ஒன்று தம் லுஆங் என்ற குகையினுள் நடத்திய தேடுதல் வேட்டையில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்தனர். மேலும், அவர்களிடம் தொடர்பு கொண்ட வீடியோ ஒன்றை அவர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதையறிந்த காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். மிகவும் ஆபத்தான, குறுகலான மற்றும் இருண்ட குகையினுள் துணிகரம் செய்த இங்கிலாந்து மீட்பு குழுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது குகையினுள் உள்ளே இருப்பவர்களுக்கு உணவுகள், மருந்துகள் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், குகையில் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் அவற்றை வெளியேற்றும் பணி தற்போது நடந்து வருகிறது எனவும், சில நாட்களில் அவர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் மீட்புக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: