கொல்கத்தா: இந்த நூற்றாண்டில் அதிக நேரம் நீடிக்க கூடிய சந்திர கிரகணம் ஜுலை 27 ஆம் தேதி தெரியும் என கொல்கத்தா பிர்லா கோளரங்கம் அறிவியல் அருங்காட்சியகத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கொல்கத்தா பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் தேவிப்பிரசாத் துவாரி கூறியுள்ளதாவது: ஜூலை 27 ஆம் தேதி பவுர்ணமி நாளின் இரவில் முழுச் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தெரியும் இந்தக் கிரகணம் இருபத் ஒன்றாம் நூற்றாண்டிலேயே அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் ஆகும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம். ஜூலை 27 இரவு 11:54 மணிக்குக் தொடங்கும் கிரகணமானது ஒரு மணியளவில் முழுக் கிரகண நிலையை அடையும். பின்னர் இரவு 1:52 மணிக்கு நிலவு முழுவதும் மறைக்கப்பட்டுக் காரிருளாகத் தோன்றி இரவு 2:43மணி வரை நீடிக்கும். இருள் கொஞ்சம் கொஞ்சமாக விலகி 3:49 மணிக்குக் கிரகணம் முடிந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.