புதுச்சேரி,
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- துணை நிலை ஆளுநரின் தலைமையில் கூட்டம் நடத்தி நிதிநிலை அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியும் உள்துறை அமைச்சகத்தில் அந்த கோப்புகள் நிலுவையில் இருந்தபோது நான் இரண்டு முறை தில்லிக்கு சென்று உள்துறை அமைச்சர், உள்துறை செயலாளர்களை சந்தித்து ஒப்புதல் பெற்றேன். இதனால் ஜூன் முதல் வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டிய பட்ஜெட் காலதாமதம் ஏற்பட்டு ஜூலை மாதத்துக்கு தள்ளிச் சென்றது.

மாநில நிதி நிலை அறிக்கை எப்படி இருக்கும் என்பதை அனைத்துக் கட்சி தலைவர்கள், எம்எல்ஏக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஏற்கனவே அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விளங்கங்களை கூறினோம். மத்திய அரசிடமிருந்து தற்போது நமக்கு எவ்வளவு நிதி வருகிறது. மாநில அரசின் வருவாய் எவ்வளவு? நிதிப்பற்றாக்குறைக்கு என்ன காரணம்? மத்திய அரசு நமக்கு முறையாக கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காததால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள், அதனால் பல நிறுவனங்களுக்கு ஊதியம் போடமுடியாத நிலை? குறித்து புதுவை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக சமூக நலத்துறை மூலமாக எந்தெந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதோ அந்த திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவோம் என்பதை வலியுறுத்தி கூறியுள்ளோம். 2017-18ம் ஆண்டில் எங்கள் அரசுஎடுத்த சிக்கன நடவடிக்கையின் காரணமாக ரூ.540 கோடி வருமானத்தை பெருக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: